‘Eco India’ நிகழ்ச்சிக்காக ஜெர்மன் தொலைக்காட்சியோடு கை கோர்க்கும் புதிய தலைமுறை! ஞாயிறுதோறும் மாலை 5.30 மணிக்கு…

காலநிலை மாற்றத்தைப்பற்றி படிக்கிறோம்; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உரை நிகழ்த்தும்போது கைத்தட்டுகிறோம். ஆனால் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில்  சுற்றுச்சூழல் எவ்வாறு இருக்கிறது? எவ்வாறு பாதிப்படைந்துள்ளது என்பன குறித்து பலருக்கும் தெரிவதில்லை. நமது நாட்டில் பருவநிலை மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு Eco India என்ற நிகழ்ச்சி வெளியாகிறது.

 DW என்ற ஜெர்மனியைச் சேர்ந்த தொலைக்காட்சியும் புதிய தலைமுறை தொலைக்காட்சியும் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சி ஞாயிறுதோறும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பிற்காக உழைக்கும் முன்னணி சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் தொழில்முனைவோர் ஆகியோர் கட்டாயம் பார்க்கவேண்டிய நிகழ்ச்சி இது. மின்ஆற்றல், மாற்று வள மேலாண்மை, எதிர்கால இயக்கம், நகரமயமாக்கத்தின் தாக்கம், பல்லுயிர் பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி, காலநிலை மாற்றத்தின் விளைவுகள், சமத்துவமின்மை மற்றும் புதுமையான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை நோக்காக கொண்ட நிகழ்ச்சி Eco India.

இந்நிகழ்ச்சியை பிரியதர்ஷினி தொகுத்து வழங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp