ஜான் அமலன் தலைமையில் ‘சௌத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேசன்’ தொடக்கம்… திறமைமிக்க இளைஞர்களின் கனவு நனவாகப் போகிறது!

இளைஞர்களின் கிரிக்கெட் கனவை நனவாக்கும் விதமாக சௌத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேசன் (South India Schools Cricket Associations) அமைப்பு தொடங்கப்பட உள்ளதாக அமைப்பின் நிர்வாகிகள் ஜான் அமலன், பிரதீப் குமார், ஏபிஜேஎம்ஜே ஷேக் சலீம், ஜோஷ்வா எடிசன், குடந்தை அஷ்ரப், விக்னேஷ் மாஜினி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் அதிக மக்களால் விளையாடப்படும் மற்றும் விரும்பப்படும் விளையாட்டு கிரிக்கெட். ஆனால், திறமை இருந்தும் பலரால் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல், நினைத்ததை சாதிக்க முடியாமல் போகிறது. காரணம், இளம் வயதில் திறமையாக கிரிக்கெட் விளையாடும் பலருக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல வழி தெரியாததும், சரியான வழிகாட்டி இல்லாததும் தான்.
அந்த வகையில் கிரிக்கெட்டில் திறமை மிக்க இளைஞர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வதோடு, திறமையாளர்களை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்கான தளமாக சௌத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேசன் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் காலத்திலேயே இளைஞர்களை ஊக்குவித்து கிரிக்கெட் உலகில் ஜொலிக்க வைக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவராக ஜான் அமலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச்செயலாளராக பிரதீப்குமார், செயலாளராக ஜோஸ்வா எடிசன், பொருளாளராக குடந்தை அஷ்ரப் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
மேலும், இந்த அமைப்பின் கௌரவத் தலைவராக சினேகா நாயரும், தமிழ்நாடு ஸ்கூல் கிரிக்கெட் பெடரேஷன் கௌரவத் தலைவராக அப்துல்கலாம் அவர்களின் பேரனுமான ஏ.பி.ஜே.எம்.ஜே.ஷேக் சலீம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவரும் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெற உள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் பதவியேற்க உள்ளனர்.