கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறன்று விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் நடித்த ’60 வயது மாநிறம்’ ஒளிபரப்பு!

கலர்ஸ் தமிழ், வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணிக்கு, 60 வயது மாநிறம் படத்தை ஒளிபரப்பவிருக்கிறது.இந்த படத்தில் விக்ரம் பிரபுபிரகாஷ் ராஜ்இந்துஜா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பரத் ரெட்டி, இளங்கோ குமரவேல் மற்றும் ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் மற்ற வேடங்களில் நடித்துள்ளனர்.

உணர்வுபூர்வமான இந்த படத்தை மொழி, அபியும் நானும் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 60 வயதான அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட தனது அப்பா கோவிந்தராஜனை இருவரின் உதவியுடன் கண்டுபிடிக்க துடிக்கும் மகனை (நடிகர் விக்ரம் பிரபு) சுற்றி நகர்கிறது. காணாமல் போன தன் தந்தையை கண்டுபிடிக்க அர்ச்சனா என்ற பெண் மருத்துவருடன் தேடலில் இறங்குகிறார் அவரது மகன். சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு கொலைகாரனிடம் (சமுத்திரகனி) சிக்கிக் கொள்கிற தனது தந்தையை விக்ரம் பிரபு எப்படி மீட்டு வருகிறார் என்பதே படத்தின் கதை.

 

17

Leave a Reply

Your email address will not be published.