வாக்கரூவின் பிராண்டு தூதராக பாலிவுட் சூப்பர்ஸ்டார் அஜய் தேவ்கான் நியமனம்

காலணிகள் துறையில் இந்தியாவின் முன்னணி பிராண்டாகத் திகழும் வாக்கரூ, அதன் பிராண்டு தூதராக பாலிவுட்டின் மிகப்பிரபல நடிகர் அஜய் தேவ்கான் நியமனம் செய்யப்பட்டிருப்பதை இன்று அறிவித்திருக்கிறது.

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இந்த ஆண்டு பண்டிகை சீசனுக்காக 200-க்கும் அதிகமான புதிய வடிவமைப்புகளில் காலணிகளை இந்த பிராண்டு அறிமுகம் செய்திருக்கும் இந்நேரத்தில் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

ஹவாஸ் கிரியேட்டிவ் குரூப் இந்தியா நிறுவனத்தின் கருத்துருவாக்கம் மற்றும் செயலாக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த விளம்பர பரப்புரை திட்டத்தில் மூன்று விளம்பர படங்கள் இடம்பெறுகின்றன.  நிலா (மூன்), மாஃபியா கும்பலின் அமைவிடம் மற்றும் பேரரசர் அக்பரின் அரசவை என்ற மூன்று வேறுபட்ட கற்பனை அமைவிடங்களில் வாக்கரூவின் பிராண்டு செய்தியை அஜய்தேவ்கான் வழங்குகிறார்.  கச்சிதமான வசனங்கள் மற்றும் கவர்ச்சிகரமான, கண்ணுக்கு இதமான காட்சியமைப்புகள் கொண்ட இந்த மூன்று விளம்பரப் படங்களுமே, “வாக் வித் வாக்கரூ” என்ற இந்த பிராண்டின் கருப்பொருளைச் சார்ந்திருக்கின்றன.  அக்டோபர் 4 புதன்கிழமையிலிருந்து இந்த தொலைக்காட்சி விளம்பரங்கள் (TVC) ஒளிபரப்பாகும் மற்றும் பல்வேறு டிஜிட்டல் தளங்களில் இவைகள் இடம்பெறும்.

 

வாக்கரூ இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் – ன் நிர்வாக இயக்குனர் திருவிகேசி நௌஷத்இந்த ஒத்துழைப்பு செயல்பாடு குறித்து கூறியதாவது: “இந்தியாவின் மிகப்பிரபல திரைப்பட நட்சத்திரமான அஜய்தேவ்கான் அவர்களை எமது புதிய பிராண்டு தூதராக கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  எமது பிராண்டின் மதிப்பீடுகள் பலவற்றை அஜய்தேவ்கான் கொண்டிருப்பது எமது பிராண்டிற்கு கூடுதல் வலுசேர்க்கிறது.  நாடெங்கிலும் மக்களின் ஆதரவையும், பேரன்பையும், நம்பிக்கையையும் அஜய் கொண்டிருக்கிறார்.  அனைத்துப் பிரிவுகள் மற்றும் பகுதிகளிலுள்ள நுகர்வோர்களுடன் நல்ல ஒரு பிணைப்பை நாங்கள் கொண்டிருக்க அஜய்தேவ்கான் உடனான இந்த ஒத்துழைப்பு நடவடிக்கை எங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.  குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்திய சந்தைகளில், இரண்டாவது மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் இந்த பிராண்டின் இருப்பையும், நற்பெயரையும் இது மேலும் வலுப்படுத்தும் என்பது நிச்சயம்.”

 ஹவாஸ் குரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் & முதன்மை கிரியேட்டிவ் அதிகாரி திரு. பாபி பவார் இந்த விளம்பர பரப்புரை திட்டம் குறித்துப் பேசுகையில், “வாக்கரூ பிராண்டு, ‘ரெஸ்ட்லெஸ்’ என்பதிலிருந்து விலகி, நடப்பதை (வாக்கிங்) மேலும் ஊக்குவிக்க விரும்பியது.  சிறிதளவு நகைச்சுவை உணர்வோடு இதை செய்வது அதன் நோக்கமாக இருந்தது. ஆகவே, வழக்கமான ஹாவாஸின் அர்த்தமுள்ள பாணியில் காலணிகளை அணிந்த நிலையில், இதுவரை நீங்கள் ஒருபோதும் சென்றிராத இடங்களுக்கு அழைத்துச்செல்ல நாங்கள் முடிவு செய்தோம் (நாங்கள் எந்த அர்த்தத்தில் என்று சொல்வதை அறிய விளம்பரத்தைக் காணுங்கள்).  நடைப்பயிற்சியும், நடப்பதும் உங்கள் உடல்நலத்திற்கு சிறப்பானது என்பது யாவரும் அறிந்ததே. என்னைப் பொறுத்தவரை, சிரிப்பும், நகைச்சுவையும் ஆரோக்கியத்திற்கு நல்லது.  இந்த விளம்பரம் இந்த இரண்டு அம்சங்களையும் சமஅளவில் சிறப்பாக கொண்டிருக்கிறது,” என்று கூறினார்.

வாக்கரூ குறித்துஉள்நாட்டிலேயே உருவாகி வளர்ந்த பிராண்டான வாக்கரூ, அனைவருக்கும் காலணிகளில் மிக சமீபத்திய ஃபேஷனை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு 2013ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ரூ. 499 என்ற விலையில் ஸ்போர்ட்ஸ் சாண்டல்களை அறிமுகம் செய்தது; காலணிகள் பிரிவில் கட்டுபடியாகக்கூடிய மிதமான விலை வரம்புகளில் பெரிதும் விரும்பக்கூடிய தயாரிப்புகளை வழங்கும் போக்கினை நிறுவுவதில் ஒரு முன்னோடி என்ற பெருமையினை வாக்கரூ பெற்றிருக்கிறது.  ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலருக்கும் ஃபிலிப் பிளாப்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷுக்கள், ஹாஃப் ஷுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய அறிமுகங்களின் மூலம் தனது தயாரிப்பு அணிவரிசையை இந்த பிராண்ட் மிகப்பெரியதாக விரிவுபடுத்தியிருக்கிறது. குழந்தைகளுக்கு வாக்கரூ ஒன்டர்ஸ், கூடுதல் குஷனிங்குடன் வாக்கரூ கேர்+, ஃபார்மல் காலணிகளுக்கு வாக்கரூ டோஸ் & டோகிடோஸ் போன்ற துணை பிராண்டுகளையும் இது கொண்டிருக்கிறது. முழு நேர்த்திக்கான நற்பெயரை தனக்கென உருவாக்கியிருக்கும் பிரபல நடிகர் அமீர் கான், இந்த பிராண்டின் தூதராக தற்போது இருந்துவருகிறார்.20-21 நிதியாண்டின்போது, வாக்கரூ-ன் விற்றுமுதல் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக இருந்தது.

500க்கும் அதிகமான டீலர்கள் வழியாக இந்தியா முழுவதிலும் செயலிருப்பைக் கொண்டிருக்கும் இந்த பிராண்ட், 1 லட்சத்துக்கும் கூடுதலான ரீடெய்ல் அவுட்லெட்கள் வழியாக வாடிக்கையாளர்களைச் சென்றடைகிறது. தனது உற்பத்தி தொழிலகங்கள் அமைந்துள்ள இடங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நீரின் மறுசுழற்சி, மரம் வளர்த்தல் போன்ற நிலைப்புத்தன்மைக்குரிய முனைப்பு திட்டங்களிலும் இந்த பிராண்ட் மிகவும் ஆர்வத்தோடு தீவிரமாக செயலாற்றி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp