டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு நாள்! ‘விடுதலை சிறுத்தைகள் கட்சி’ சார்பாக தி. நகர் மோதிலால்தெரு ஆட்டோ நிறுத்தத்தில் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு நாளை முன்னிட்டு ‘விடுதலை சிறுத்தைகள் கட்சி’ சார்பாக சென்னை தி. நகர் மோதிலால்தெரு ஆட்டோ நிறுத்தத்தில் அம்பேத்கருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது!

அதன்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தி. நகர் எம்.எஸ் . சந்துரு மற்றும் 133- வது வட்டச் செயலாளர் அருள் ஆகியோர் தலைமையில் ஆயிரம் விளக்கு அர்ஜுன், சைதை லியோ, வட்ட பொருளாளர் வாட்டர் முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது!

இந்த நிகழ்வில் பெருமாள், ராஜன், மோகன், செஞ்சுடர், ஜானகிராமன், எழில் மாறன், கட்சி உறுப்பினர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்!

18

Leave a Reply

Your email address will not be published.