கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஞாயிறன்று புத்தம் புதிய திரைப்படம்… சிபி சத்யராஜ் நடிக்கும் ‘ரங்கா.’ 

தமிழகத்தின் அர்த்தமுள்ள பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கலர்ஸ் தமிழ்,  அதன் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வரும்  ஞாயிற்றுக்கிழமை சிபி சத்யராஜ்  நடிப்பில் வெளிவந்த ‘ரங்கா’ திரைப்படத்தை  உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக   ஒளிபரப்பவிருக்கிறது.

மதியம் 2 மணிக்கு ஒளிரப்பாகும் காதலும் திகிலும் கலந்த இந்த புத்தம் புதிய திரைப்படத்தை ஒரைசா ரிபைண்டு ரைஸ் பிரான் ஆயில் சிறப்பு பார்ட்னராக இணைந்து வழங்குகிறது.

இந்த படத்திற்கு கதை எழுதி வினு இயக்கி உள்ளார்கதாநாயகியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார்மேலும் நகைச்சுவை நடிகர் சதீஷ்நடிகர் மனோபாலா மற்றும் சிவ ஷர ஆகியோரும் நடித்துள்ளனர்.  பனி படர்ந்த மலைகளின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம்மகிழ்ச்சியாக பொழுதுபோக்க மணாலிக்குச் செல்லும் புதுமணத் தம்பதி எதிர்கொள்ளும் பிரச்சினையை சுற்றி வருகிறது

இந்த படத்தில் ஆதித்யாவாக நடித்துள்ள சிபி சத்யராஜ்தனது குழந்தைப் பருவ காதலி அபிநயாவான நடிகை நிகிலா விமலை ரகசிய திருமணம் செய்துகொள்கிறார்இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்கள் தேனிலவுக்காக மணாலிக்குச் செல்கிறார்கள்அப்போது அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் ரகசிய கேமரா வைத்து படம் எடுப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்ரகசிய கேமரா மூலம் எடுக்கப்படும் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு அதன் மூலம் சிலர் பணம் சம்பாதிப்பதையும் அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள்இவர்களை எதிர்த்து அவர்கள் இருவரும் எப்படி போராடி ஜெயித்தார்கள் என்பதே இப்படத்தின் கதையாகும்.

 இது குறித்து இயக்குனர் வினு கூறுகையில், “ ரங்கா படம் காதலுடன் திகில் நிறைந்த படம் ஆகும்இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் முதலில் இது காதல் கதை என்று நினைப்பார்கள்ஆனால் போகப்போக இது மிகவும் திகில் நிறைந்த படமாக இருக்கும்ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை இருக்கையின் விளிம்பிற்கே கொண்டு செல்லும்எனது முதல் திரைப்படமான இந்த படம் கலர்ஸ் தமிழ் போன்ற பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழ் பார்வையாளர்கள் இந்த படத்தை பார்த்து மிகவும் உற்சாகம் அடைவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார் ”.

 சிபி சத்யராஜ் கூறுகையில், “இந்த படத்தின் வித்தியாசமான கதை காரணமாகவே நான் இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன்இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறதுஇந்த படம் எனக்கு மிகுந்த புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்ததுமேலும் ஒட்டுமொத்த படக்குழுவும் இந்த படத்தில் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். இது நிச்சயம் கலர்ஸ் தமிழ் பார்வையாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தரும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp