கலர்ஸ் தமிழ் புதிய தொடர்கள். பெண்ணுரிமையை எடுத்துரைக்கும்‘ஜமீலா’, ‘உள்ளத்தை அள்ளித்தா.’

பெண்ணுரிமையை எடுத்துரைத்து அவர்களை கவுரவிக்கும் வகையில் ‘ஜமீலா’ மற்றும் ‘உள்ளத்தை அள்ளித்தா’ ஆகிய இரண்டு புத்தம் புதிய தொடர்களை ஒளிபரப்ப உள்ளது கலர்ஸ் தமிழ். நடிகை தன்வி ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜமீலா தனது திறமையை உலகறிய வெளிக்காட்டி, சாதிக்கத் துடிக்கும் ஒரு இளம் பெண்ணின் கதையை சுவாரசியமாக சித்தரிக்கிறது. தன் பயணத்தில் ஏற்படும் சவால்களை சமாளித்து ஜமீலா தனது இலக்கை எப்படி அடைகிறாள் என்பதை காண வரும் 10ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.

 

இந்த தொடருடன் புதிதாக, தனது குடும்பத்தை உயர்த்த முயலும் ஆட்டோ ஓட்டுனரான ஆட்டோ ராணியின் கதையை சித்தரிக்கும் உள்ளத்தை அள்ளித்தா’ என்னும் தொடர் ஒளிபரப்பாக உள்ளது. நடிகை வைஷ்ணவி நடித்துள்ள இந்த புத்தம் புதிய தொடர் வரும் 10–ந்தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும். ஷாப்பி.இன், சென்னை சில்க்ஸ் மற்றும் ஆனந்தம் சில்க்ஸ் ஆகியவை இணைந்து வழங்கும் ஜமீலா தொடரையும், பெண்களுக்கான உள்ளாடைகள் தயாரிப்பு நிறுவனமான பிரித்வி வழங்கும் ‘உள்ளத்தை அள்ளித்தா’ தொடரையும் வரும் 10–ந்தேதி முதல் இரவு 7 மற்றும் 9 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்து பார்த்து மகிழுங்கள்.

இது குறித்து கலர்ஸ் தமிழ் வர்த்தக பிரிவு தலைவர் திரு ராஜாராமன் கூறுகையில், “ அனைவரும் விரும்பும் வகையில், மகத்தான சமூக தாக்கத்தை ஏற்படுத்தும், வழக்கத்திற்கு மாறான மற்றும் சுவாரசியமான கதைக்களங்களை கொண்ட தொடர்களை வழங்கும் நோக்கத்துடன், ஜமீலா மற்றும் உள்ளத்தை அள்ளித்தா போன்ற தொடர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். புத்துணர்ச்சியூட்டும் கதைக்களங்கள் கொண்ட இது போன்ற தொடர்கள் பெண்களை ஊக்குவிக்க உதவுகின்றன. இதுபோன்ற தொடர்கள் தங்கள் குடும்பத்தின் நிதி நிலை மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்றவற்றிற்கு ஆண்கள் மட்டுமே பொறுப்பு என்பதை மாற்றிக் காட்டுகிறது. ஜமீலா, உள்ளத்தை அள்ளித்தா ஆகிய தொடர்கள் எங்களின் பிரதான நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளன. இது பார்வையாளர்களிடம் நேர்மறை சிந்தனையை ஏற்படுத்துவதுடன் மிகுந்த வரவேற்பை பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

நம்பிக்கை மற்றும் தனது கனவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து குடும்ப பிரச்சினைகளுக்கு மத்தியில், எப்படி தனது இசை பயணத்தை தொடர்கிறார் என்பதே ஜமீலா தொடரின் கதையாகும். அவளது இலக்கை அடைய அவளது குடும்பத்தினரே அவளுக்கு உதவாத நிலையிலும், அவள் வெற்றி பெற அவருக்கு நடிகர் அஜய் வழிகாட்டுகிறார். இதனால் ஆறுதல் அடையும் அவள், தனது லட்சியத்தை அடைவதற்கான நம்பிக்கை எண்ணம் அவளது மனதில் துளிர்விடுகிறது. இந்த தொடரின் துணை கதாபாத்திரங்களாக ஐஸ்வர்யா பாஸ்கரன் – சலீமா வாகவும் மற்றும் கெளதம் சுந்தர்ராஜன் – ஹனிஃபா வாகவும் நடித்திருக்கிறார்கள்.

இதேபோல், பேராசை, தன்னலமற்ற தன்மை மற்றும் குடும்ப சூழலுக்கு இடையே ஒரு மெல்லிய எல்லையை வரையறுத்து, ‘உள்ளத்தை அள்ளித்தா’ தொடரில் ஆட்டோ ராணியாக வலம் வந்து, அவள் வசிக்கும் தெருவில் உள்ள மக்களுக்கு உதவி செய்து, பலரின் இதயங்களை தொட்டு, அவளது குடும்பத்தை காப்பாற்றவும், தனது வாழ்க்கை பயணத்தை இனிதாக்கவும் போராடுகிறார் நடிகை வைஷ்ணவி. இந்த நிலையில் அவள் தொழில் அதிபர் சந்தோஷை (நடிகர் பிருத்விராஜ்) சந்திக்கிறார், பின்னர் அவருடன் நல்லதொரு உறவை ஏற்படுத்திக் கொள்கிறார். அதனைத் தொடர்ந்து அவளது வாழ்வில் ஏற்படும் சம்பவங்களே இந்த தொடரின் மீதிக் கதையாகும்.

இது குறித்து நடிகை தன்வி ராவ் கூறுகையில், “ தொலைக்காட்சியில் பெண்களுக்கென நல்ல கதாபாத்திரங்களை வழங்கி எடுக்கப்படும் தொடர்களுக்கு மத்தியில், கலர்ஸ் தமிழ் அதையும் தாண்டி புதுமையான கதை அம்சம் கொண்ட தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. எனவே அவர்களுடன் இணைந்திருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஜமீலா தொடரில் நான் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பல்வேறு தடைகள் இருந்தபோதிலும் தனது லட்சியத்தை அடையத் துடிக்கும் பெண்ணாக இதில் நடித்திருக்கிறேன். இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் தொடராக அமையும்” என்று தெரிவித்தார்.

உள்ளத்தை அள்ளித்தா தொடரில் நடித்துள்ள நடிகை வைஷ்ணவி கூறுகையில், “ நான் ஏற்கனவே கலர்ஸ் கன்னடத்தில் ‘மிதுன ராசி’ என்ற தொடரில் இதே கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், தற்போது ஆட்டோ ராணியாக அதே கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறித்து பெருமைப்படுகிறேன். 4 வருடங்களாக அந்த கதாபாத்திரமாக வாழ்ந்த நான் தற்போது ஆட்டோ ராணியாக தமிழில் நடித்தது மகிழ்ச்சியான தருணம் ஆகும். சிலர், பொருளாதார ரீதியாக பலவீனமாக இருந்தாலும், பல சாதனைகளை செய்து, சமுதாயத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய செய்திகளை நாம் பத்திரிக்கைகளில் படித்திருப்போம். அதேபோல் தன்னலமின்றி சமூகத்திற்கு சேவை செய்யும் பெண்ணாக ஆட்டோ ராணி செயல்படுகிறாள். ஆண்கள் மட்டுமே தங்கள் குடும்பத்திற்காக சம்பாதிக்க முடியும் மற்றும் தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும் என்ற கொள்கைகளை மாற்றி பெண்களாலும் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த தொடர் உள்ளது. எனது அன்பான பயணம் இனி வரும் நாட்களில் நம் பார்வையாளர்களை மேலும் கவரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

ஜமீலா மற்றும் உள்ளத்தை அள்ளித்தா ஆகிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதால், அது தொடர்பான விளம்பரங்களை தமிழகம் முழுவதும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி மேற்கொண்டு வருகிறது. தியேட்டர் இடைவேளையில் இந்த தொடரின் விளம்பரங்களை ஒளிபரப்ப சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கும் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் பாகம்–1 படத்துடன் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளுடன் கலர்ஸ் தமிழ் கைகோர்த்து உள்ளது. மேலும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ஆட்டோக்களில் எல்.ஈ.டி டிஜிட்டல் விளம்பரங்களையும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp