திருமுருகன் இயக்கிய ‘நாதஸ்வரம்’ நெடுந்தொடர். செப்டம்பர் 5 முதல் கலைஞர் தொலைக்காட்சியில்…

‘தெய்வமகள்’, ‘நாயகி’, ‘திருமதி செல்வம்’ நெடுந்தொடர்களை தொடர்ந்து, குடும்பங்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ‘நாதஸ்வரம்’ மற்றும் ‘குலதெய்வம்’ நெடுந்தொடர்களை ஒளிபரப்ப கலைஞர் தொலைக்காட்சி முடிவு செய்திருக்கிறது.

திருமுருகன்

இதில், ‘நாதஸ்வரம்’ நெடுந்தொடரை திருமுருகன் இயக்கி நடிக்க, உடன் மௌலி, பூவிலங்கு மோகன், ஷ்ரித்திகா, கீதாஞ்சலி, ரேவதி, சுருதி, ஜெயஸ்ரீ, சங்கவி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்த தொடர், அண்ணன் தம்பி பாசம், மாமியார் மருமகள் பிரச்சினை, தங்கைகளின் பாரத்தை தாங்கும்  அண்ணன் என குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நெடுந்தொடரை கலைஞர் தொலைக்காட்சியில் வரும் செப்டம்பர் 5-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு காணலாம்.

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp