புதிய தலைமுறை தமிழன் விருதுகள் – 2022

உண்மை உடனுக்குடன் என்ற முதன்மையான முழக்கத்துடனும் ஊடக அறத்துடனும் இயங்கிவரும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக தமிழன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில், சமூகப்பணி மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் மூலமாக  சமூக மேம்பாட்டிற்காக உழைக்கும் ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களை கௌரவிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்படுகிறது.

கொரோனா காரணமாக இரு வருட இடைவெளிக்குப் நடத்தப்படும் இவ்விழா கலை நிகழ்ச்சிகளுடன் மிகவும் உற்சாகமாக நடத்தப்பட உள்ளது.

இவ்வருடத்திற்கான ‘தமிழன் விருதுகள்’ விழா செப்டம்பர் மாதம் 15-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் திரையுலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிகழ்ச்சி விரைவில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp