‘கோலாகல கொலு’, ‘நவராத்திரி நர்த்தனம்’, ‘நவராத்திரி மகிமை’, ‘ருசிக்கலாம் வாங்க.’ புதுயுகம் தொலைக்காட்சியின் பயனுள்ள, சுவாரஸ்யமான நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள்.

புதுயுகம் தொலைக்காட்சியில் செப்டம்பர் 26 முதல் மதியம் 12.30 மணிக்கும் மறுஒளிபரப்பு மாலை 5.00 மணிக்கும் இடம்பெறவிருக்கிற நிகழ்ச்சி ‘ருசிக்கலாம் வாங்க.’

இந்த நிகழ்ச்சியில்  நமது நவராத்திரி பண்டிகையின் 10 நாட்களும் செய்ய வேண்டிய பிரசாதங்களை சமைத்து காட்டுவதோடு, நவராத்திரி குறித்த அனைத்து விஷயங்களையும் சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்கிறார்கள் யோகாம்பாள் மாமி, மீரா கிருஷ்ணன், ஜெயந்தி மற்றும் சுபாஷினி!

நலன் தரும் நவராத்திரி

இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதி ‘நவராத்திரி மகிமை‘ என்ற பெயரில் லட்சுமி துர்கா சரஸ்வதி வழிபாடுகள் , விரதத்திற்கு உகந்ததாக விளங்குகின்ற நவராத்திரி விழாவில் தேவியரை வழிபட வேண்டிய முறை அவர்களின் ரூபம் என்னென்ன என்பதை விளக்க,  2-ம் பகுதி முப்பெரும் தேவியரின் ரூபத்தை தலா மூன்று நாட்களாக பிரித்து பரத கலைஞர்கள் வழங்கும் நாட்டிய நிகழ்ச்சி, ‘நவராத்திரி நர்த்தனம்’ என்ற பெயரிலும்,  3-ம் பகுதி, சிறப்பு வாய்ந்த கோவில்கள் கொலு நேயர்களின் வீடுகளில் வைக்கப்படும் கொலு மற்றும் திரைத்துறை நட்சத்திரங்கள் வீடுகளில் வைக்கப்படும் கொலுக்களின் சிறப்பு பகுதி ‘கோலாகல கொலு‘ என்ற தலைப்பிலும் இடம்பெறுகிறது.

 

செப்டம்பர் 26 முதல் மதியம்  12.30 மணிக்கும் மறுஒளிபரப்பு மாலை 5.00 மணிக்கும் நமது புதுயுகம் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp