புதிய தலைமுறை’யில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் என்னென்ன?

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தீபாவளியன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

அதில் குறிப்பாக, திரைக்கு வந்த தீபாவளி திரைப்படங்கள் பற்றிய திரை விமர்சனம் ஒளிபரப்பாக இருக்கிறது.

குடும்பங்கள்… குதூகலங்கள் என்ற அரை மணி நேர நிகழ்ச்சியில், கூட்டுக் குடும்பம், அடுக்குமாடி குடியிருப்பு குடும்பங்கள், ஆதரவற்ற குடும்பங்களின் தீபாவளி கொண்டாட்டங்களும் ஒளிபரப்பாக இருக்கின்றன.

உலக நாடுகளில் உள்ள இந்தியர்களின் தீபாவளி கொண்டாட்டங்களும் தொகுக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட இருக்கின்றன.

தீபாவளியையொட்டி, என்ன வாங்கலாம், எங்கு வாங்கலாம் என்ற விவரங்கள் கொண்ட நேரலையும், தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் இறுதி நேர விற்பனை எப்படி இருக்கிறது எனக்கூறும் சந்தை நிலவரங்கள் நேரலையும் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.

அதேபோல, தமிழகம் எப்படியெல்லாம் தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தயாராகிறது என்பதை விளக்கும் வகையில், அந்தந்த மாவட்டங்களில் தயாரிக்கப்படும் இனிப்பு, பலகார வகைகள், துணிகள், பட்டாசுகள் போன்றவற்றின் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலவரங்களையும் புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp