இரும்புச் சத்து குறைபாட்டிற்கு காரணங்கள்

 

இரும்புச்சத்து பற்றாக்குறை எப்படி அனீமியா என்னும் ரத்த சோகையை ஏற்படுத்துமோ அதேபோல இந்த ஃபோலேட் சத்து குறைவாக இருப்பதும் அனீமியா என்னும் ரத்த சோகைக்குக் காரணமாக அமையும்.

இந்த ஃபோலேட் என்பது வைட்டமின் பி12 ஐ குறிக்கும். இந்த வைட்டமின் பி12 பற்றாக்குறை ஏன் உண்டாகிறது, இதன் அறிகுறிகள் என்ன, என்ன மாதிரியான தீர்வுகள் இருக்கின்றன, இதனால் வரும் ஆபத்துகள் என்ன என்பது குறித்து இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்
ரத்த சோகை என்பது நம்முடைய உடலில் இயல்பாக இருக்க வேண்டிய சராசரி அளவை விட ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதைக் குறிக்கக் கூடியது. நம்முடைய உடலில் இரும்புச்சத்தும் இந்த வைட்டமின் பி12ம் குறைபாடு ஏற்படும்போது ஹீமோகுளோபின் அளவு குறைகிறது.
வைட்டமின் பி12 பற்றாக்குறையின் அறிகுறிகள்
வைட்டமின் பி12 (ஃபோலேட்) பற்றாக்குறை ஏற்படும்போது கீழ்வரும் அறிகுறிகள் உடலில் உண்டாகும்.

அளவுக்கு அதிகமான உடல் சோர்வு,
ஆற்றல் இழப்பு,
மூச்சு விடுவதில் சிரமம்,
உடல் வலி,
தலைவலி,
இதயத் துடிப்பில் மாறுதல்,
உடலுக்குள் இருந்து ஒருவித சத்தம் வெளிவருவது,
பசியின்மை,
திடீர் எடையிழப்பு,
வாய்ப்புண்,
மனஅழுத்தம்,

ஆகிய பொதுவான அறிகுறிகள் உண்டாகும்.
ஃபோலேட் குறைபாட்டுக்கான முக்கியமான அறிகுறிகள்
ரத்தச்சோகைக்கு உரிய எல்லா வித அறிகுறிகளும் உண்டாகும்.
உணவின் சுவை தெரியாமல் போகும்,
டயேரியா உண்டாகும்,
கை, கால் விரல் நரம்புகளில் நடுக்கம்,
தசை வலிமையில்லாமல் இருப்பது,
மனச்சோர்வு

ஆகிய அறிகுறிகள் உண்டாகும்.
வைட்டமின் பி12 குறைபாட்டுக்கான காரணங்கள்
வைட்டமின் பி12 குறைபாடு பின்வரும் காரணங்களால் உண்டாககக்கூடும்.

ஆட்டோ இம்யூன் நோய்களில் ஒன்றான பெர்னீசியஸ் அனீமியா என்னும் தீங்கு விளைவிக்கக்கூடிய ரத்தசோகையால் வைட்டமின் பி12 குறைபாடு உண்டாகலாம்.

வைட்டமின் பி12 குறைபாட்டுக்கான முக்கியக் காரணமாக டயட் இருப்பதாக சொல்லப்படுகிறது. நம்முடைய உணவுமுறையில் போதுமான அளவு ஃபோலேட் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் போவதால் வைட்டமின் பி12 குறைபாடு உண்டாகிறது.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது வயிற்றில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலோ அவர்களுக்கு இந்த வைட்டமின் பி12 குறைபாடு அதிகமாக உண்டாகும்.

குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவகளுக்கு வைட்டமின் பி12 குறைபாடு உண்டாகும்.

வேறு சில உடல்நலப் பிரச்சினைக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் வைட்டமின் பி12 குறைபாடு உண்டாகலாம்.

சிலருக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொண்டாலும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்து ரத்தத்தில் சரியாக கலக்காமல் போகும்போது வைட்டமின் பி12 குறைபாடு உண்டாகலாம்.

நீரிழிவு. இதய நோய்கள், சிறுநீரக பிரச்சினைகள், டயாலிசிஸ் செய்பவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். சிறுநீரின் வழியாகவும் ஊட்டச்சத்துக்கள் வெளியேறி ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்தலாம்.

இதைத்தவிர, கர்ப்ப காலத்தில், புற்றுநோய் உள்ளவர்கள், ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள், உடலில் ஏதேனும் இன்பிளமேஷன் ஏற்பட்டிருத்தல் ஆகிய காரணங்களாலும் இந்த ஃபோலேட் சத்து குறைபாடு உண்டாகலாம்.
வைட்டமின் பி12 குறைபாட்டை கண்டறிவது எப்படி?
வைட்டமின் பி 12 குறைபாட்டை மேற்கண்ட காரணங்கள் மற்றும் அறிகுறிகளை வைத்தும் கண்டறியலாம்.

வைட்டமின் பி12, ஃபோலேட் குறைபாட்டை கண்டறிய பல்வேறு வகையான ரத்தப் பரிசோதனைகள் இருக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது,
ரத்த சிவப்பணுக்கள் சாதாரணமாக இருப்பதை விட பெரிய அளவில் இருப்பது,
ரத்தத்தில் வைட்டமின் பி12 அளவின் சராசரி,
ரத்தத்தில் ஃபோலேட் இருப்பதன் அளவு
ஆகியவற்றை வைத்து வைட்டமின் பி12 குறைபாடு கண்டறியப்படுகிறது.
வைட்டமின் பி12 பற்றாக்குறைக்கான சிகிச்சைகள்
வைட்டமின் பி12 பற்றாக்குறைக்கு ஆரம்ப கட்டத்தில் ஹைட்ராக்சோகோபாலமின் மற்றும் சியனோகோபாலமின் ஆகிய ஊசிகள் செலுத்தப்படுகின்றன. இந்த ஊசிகள் தொடர்ச்சியாக செலுத்தப்படுவதில்லை. ஒருமுறை செலுத்தினால் பிறகு 2-3 மாதங்கள் இடைவெளி விட்ட பிறகே செலுத்துவார்கள்.

உணவுமுறையில் மாற்றங்கள் செய்வது,

தொடர்ச்சியாக உடலின் மருத்துவ நிலைகளைக் கண்காணிப்பது,
வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவின் ஆபத்துகள்
அனீமியாவிலும் பல வகைகள் உண்டு. எல்லா வகையான அனீமியாவிலும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை பம்ப செய்ய நுரையீரல் சிரமப்படும்.

அசாதாரணமான வேகமாக இதயத் துடிப்பு உண்டாகும்.

இதய செயலிழப்பு உண்டாகலாம்.

கண்பார்வையில் கோளாறுகள், ஞாபக மறதி போன்ற நரம்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும்.

மலட்டுத்தன்மை, கருவளம் குறைதல் ஏற்படும்.

வயிற்று புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள் என்னென்ன
வைட்டமின் பி12 அசைவ உணவுகளில் தான் அதிகமாக இருக்கின்றன. சைவ உணவுகளில் மிக மிகக் குறைவு.

இறைச்சி,
மீன் வகைகள்,
இறால்,
பால் மற்றும் பால் பொருள்கள்
முட்டை,
சோயா பொருள்கள் (சோயா பால், சோய் சங்க், சோயா பீன்ஸ்)
செரல் வகைகள் (ஓட்ஸ், கார்ன்பிளேக்ஸ்)

போன்றவற்றில் இருந்து வைட்டமின் பி12 ஊட்டச்சத்தைப் பெற முடியும்.

நன்றி: Aadhavan Siddhashram Pvt Ltd சித்த மருத்துவர் அருண் சின்னையா

 

22

Leave a Reply

Your email address will not be published.